இந்த ராசிக்காரர்களுக்கு இனி எடுத்த காரியத்தில் வெற்றி தான்!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி எடுத்த காரியத்தில் வெற்றி தான்!!


இன்று , கார்த்திகை 19, டிசம்பர் 05, 2021, ஞாயிற்றுக் கிழமை
திதி : பிரதமை காலை 09.28 க்கு பின் துவிதியை
நட்சத்திரம்: கேட்டை காலை 07.47க்கு பின் மூலம்
யோகம்:மரணயோகம் காலை 07.47க்கு பின் அமிர்தயோகம்
சந்திரதரிசனம்.


இராகு காலம் :
மாலை 04.30 மணிமுதல் 06.00 மணி வரை
எம கண்டம் :
பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை
குளிகன் :
பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 மணி வரை


சுப ஹோரைகள் :


காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை
மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எடுத்த காரியத்தில் வெற்றி தான்!!

ரிஷபம்

இன்று சந்திராஷ்டமம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். காலதாமதம், காரியத்தடை உருவாகலாம். பொறுமையும், நிதானமும் கடைப்பிடித்தால் பிரச்சனைகளை குறைக்கலாம்.

மிதுனம்

இன்று சிறப்பான நாள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியம் கைகூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.

கடகம்

இன்று மகிழ்ச்சியான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் பெறலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். சேமிப்புக்கள் உயரும்.

சிம்மம்

இன்று சுமாரான நாள். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் மந்தமாக இருக்கும். உறவினர்களிடையே வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் அனுகூலம் பெறலாம். தெய்வ நம்பிக்கை கூடும்.

கன்னி

இன்று மந்தமான நாள். காரியத் தடை , காலதாமதம் ஏற்படலாம் .வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறையும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பொறுமையை கடைப்பிடித்தால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

துலாம்

இன்று இனிய நாள். சுபகாரியம் கைகூடும். ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். எடுத்த காரியத்தில் வெற்றி வந்து சேரும் . பொன்,பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் வந்து சேரும். உறவினர்களின் ஆதரவு கூடும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எடுத்த காரியத்தில் வெற்றி தான்!!

விருச்சிகம்

இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணவிரயத்தை தடுக்கலாம். புதிய முயற்சிகளில் கடும் உழைப்பிற்கு பிறகு பலன் கிட்டும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு

இன்று உற்சாகமான நாள்.பணம் பல வழிகளில் வந்து சேரும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்

இன்று அனுகூலமான நாள். வரவுக்கேற்ற செலவு நிச்சயம். பொறுமையை கடைப்பிடித்தால் கூடுதல் பலன்களை பெறலாம். புதிய முயற்சிகளில் கடின உழைப்பு தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றால் ஆதாயம் பெறலாம். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கும்பம்

இன்று சுபமான நாள். ஆரோக்கியம் சிறக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். தொழிலில் பணவரவு சிறப்பாக இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மீனம்

இன்று சிறப்பான நாள். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும்.குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

From around the web