திரையரங்கில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பாத்ரூமில் செல்போன் வீடியோ எடுத்து அதிர வைத்த சிறுவன்!
இந்தியா முழுவதும் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.
மருத்துவமனையில் இருந்து டூட்டி முடித்து வீடு திரும்பிய செவிலியர் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவ மாணவியின் தாய், அத்தை சிகிச்சைக்காக சென்ற நிலையில், மருத்துவரால் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கலாசிபாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திரையரங்கம் உள்ளது. இந்த தியேட்டருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது இன்னும் 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன், எதிரே அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அந்த இளம்பெண் தியேட்டர் கழிவறைக்கு சென்ற போது, கழிவறை ஜன்னல் மீது செல்போனை வைத்து படம் எடுத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், கலாசிபாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டு, சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
