மனைவியை பொறிவைத்து பிடித்த கணவன் – சிக்கிய போலீஸ்..!!

 
மனைவியை பொறிவைத்து பிடித்த கணவன் – சிக்கிய போலீஸ்..!!

தெலங்கானா மாநிலம் வன்பரத்தி நகர புறநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் ஷேக் சபீ. இவருக்கும் அருகிலுள்ள கொத்தகோட்டை என்கிற பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இதுகுறித்து பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். வழக்கம் போல அலுவலகம் போவதாக சொல்லி கொண்டு, வீட்டை விட்டு கிளம்பி அருகில் வசிபப்வர் வீட்டில் இருந்துகொண்டார்.

மனைவியை பொறிவைத்து பிடித்த கணவன் – சிக்கிய போலீஸ்..!!

எதிர்பார்த்தபடியே இவர் கிளம்பிப்போன சிறிது நேரத்தில் ஷேக் சபீ அங்கு வந்தார். சிறிது நேரம் கழித்து உறவினர், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தனது வீட்டு கதவை தட்டியுள்ளார். மனைவி வந்து கதவை திறந்ததும் எஸ்.ஐ ஷேக் ஷபீக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

உடன் அருகில் இருந்த மனைவிக்கும் தர்ம அடி விழுந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றம் உறுதியானதை அடுத்து ஷேக் ஷபீயை கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் ஷேக் ஷபீயை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

From around the web