வெடித்து சிதறிய சிலிண்டர்... தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் பலி; 5 பேர் படுகாயம்!
Sep 23, 2024, 07:01 IST
மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கினர்.
இது குறித்த தகவல் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் மீட்பு பணியை தொடங்கினர். இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 3 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது இரு மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!
From
around the
web