சோகம்... 3 மணி நேரமா டாக்டர் வரவேயில்லை... துடிதுடித்து உயிரை விட்ட இளைஞர்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக அனீஷ் கைலாஷ் சவுக்கான். அவருக்கு திடீரென தலையில் அடி ஏற்பட்டதால் செயின்ட் சார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்க வரவே இல்லை. உடன் வந்திருந்த உறவினர்கள் கேட்டு கேட்டு அழுது பதறித்துடித்த போது கடைசியில் அங்கிருந்த மருத்துவ பயிற்சியாளர் ஒருவர் அனீஷுக்கு சிகிச்சை அளிக்க சென்றார்.

ஆனால் அவர் அதற்குள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதற்குக் காரணம் மருத்துவமனையின் அலட்சியம்தான் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
