உலக கோப்பையில் சொதப்பிய இந்திய அணி... மேட்ச் பார்த்த இளைஞர் மாரடைப்பால் மரணம்!

மொத்த உலகமும் நேற்றைய உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் விளையாட்டைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். இந்த உலக கோப்பைப் போட்டியில், தோல்வியையே சந்தித்திராத இந்திய அணி என்று இத்தனை நாட்களும் பேசிய பெருமைக்கு நேற்று முடிவுரை எழுதியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்நிலையில், நேற்றைய இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், இந்தியா வெறும் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆனாலும் பந்துவீச்சில் அதிசயங்கள் நிகழந்து, கோப்பையை இந்தியா வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்து, ஆவலுடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மன வேதனையில் இருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார் (25). இவர், தனது வீட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் போன்று டிராபி நமக்குத் தான் என்று ஜோதி குமாரும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், போட்டியில் மாற்றம் ஏற்பட ஏற்பட ஜோதி குமார் மன வேதனை அடைந்துள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பதறி போன அவருடைய குடும்பத்தினர் உடனடியாக ஜோதி குமாரை, திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட ஜோதி குமாரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேவும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!