அடுத்தடுத்து சோகம்... விஷச்சாராயம் குடித்து 21 பேர் பலியான அவலம்!

 
பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியில் கடந்த 20ம் தேதி பலர் கள்ள சந்தையில் விஷ சாராயம் அருந்தினர். அவர்கள் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், 20ம் தேதி 4 பேரும், 21ம் தேதி 4 பேரும், 22ம் தேதி 8 பேரும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று மேலும் 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. விஷ சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்ததால் சங்கரூர் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web