தலித் பெண்ணை கற்பழித்த இஸ்லாமியர்.. ஒட்டு மொத்த கிராமத்தையும் சூறையாடிய மக்கள்!

 
ஜைனூர் கிராமம் ஜைனூர் கிராமம்

இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தலித் பெண்ணைக் கற்பழித்ததால் ஒட்டுமொத்த கிராமத்தையும் மக்கள் சூறையாடியது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், ஆசிபாபாத், ஜைனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த தகவல் ஊர் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆத்திரமடைந்த 2000 குடிமக்கள் ஒன்று திரண்டு அந்த ஊரில் உள்ள மசூதிக்கு சென்று அதை அடித்து நொறுக்கினர்.



மேலும், அவர்களுக்கு சொந்தமான கடைகளுக்கும் சென்று வழிப்பறி செய்துகொள்ளையடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். மேலும், கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய 2000 பேர் கொண்ட கும்பல் ஜைனூர் கிராமத்திற்குள் நுழைந்து, அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு மசூதி மற்றும் கடைகள் மற்றும் சொத்துக்களை குறி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஷேக் மக்தூம் என்ற ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரால் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கியதால்  கலவரம் ஏற்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா