அதிர்ச்சி வீடியோ.... பாம்பு கடித்து தலைக்கேறிய விஷம்... தந்தை கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்!
இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் வசித்து வருபவர் கங்காரம். இவர் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருகின்றார். சமீபகாலமாக இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூகவலை தளத்தில் பதிவு செய்வதற்காக சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை தனது மகன் சிவராஜிடம் கொடுத்துள்ளார்.
Loading tweet...
பின்னர் வீடியோ எடுப்பதாக கூறி பாம்பை வாயில் வைக்கும் படி தனது மகனிடம் கங்காராம் கூறியுள்ளார்.அதன்படி மகன் சிவராஜும் வாயில் வைத்துள்ளார். பாம்பு அவரை நாக்கில் கடித்துவிட்டது. பாம்பின் விஷம் தலைக்கு ஏறியதால் சிவராஜ் சிறுது நேரத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் காவல்துறையினர் பாம்பை வாயில் வைத்து வீடியோ எடுக்க செய்த கங்காராமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
