அதிர்ச்சி வீடியோ... அரசு அதிகாரி வாகனத்தை தீவைத்து எரித்த இளைஞர்!

 
பிரித்திவி ராஜ் பிரித்திவி ராஜ்

இந்தியாவில் கர்நாடகாவில்  சித்ரதுர்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த  வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பிரித்திவிராஜ். இவர் காணாமல் போனதாக கூறி  ஜூலை அவருடைய தாய் காவல் நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக சென்றுவிட்டார்.  

அவருடைய புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டிற்கு திரும்பிய பிரித்திவிராஜ் காவல்துறையினரிடம் தன் தாய் கொடுத்த புகார் குறித்த ஜூலை 23ம் தேதி சென்றார்.இந்நிலையில் பிரித்திவிராஜ் நாடு ரோட்டில் வட்டாட்சியர் காரை தீ வைத்து எடுத்துள்ளார்.  தன்னுடைய தாயின் புகாரை ஏற்காததால் ஆத்திரத்தில் வட்டாட்சியர் காரை நடுரோட்டில் தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.

 

இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரித்திவிராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆகஸ்ட்  14ம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது குறித்த பிரித்திவிராஜ் மீது ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.  

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா