பகீர் வீடியோ... 5 நாய்க்குட்டிகளை சுவரில் வீசி கொன்ற தொழிலதிபர்!
அப்போது தான் பிறந்த 5 நாய்க்குட்டிகளை துடித்துடிக்க கல்லால் அடித்து, சுவற்றில் மோதி தொழிலதிபர் கொன்றொழித்த வீடியோ அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அபார்ட்மென்ட் வளாகம் ஒன்றில் நடந்த வன்கொடுமையான நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிகழ்வில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ஆஷிஷ் எனப்படும் தொழிலதிபர். இவர் தனது நாயுடன் வாக்கிங்கில் சென்று கொண்டிருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் இருந்த 5 புதுதாக பிறந்த தெரு நாய்க்குட்டிகளை கல்லால் அடித்தும் மற்றும் காலால் உதைத்தும் சுவரில் வீசியும் கொலை செய்கிறார்.
https://t.co/hj45pwGHOg
— Khan (@khanbr1983) April 16, 2025
His business address https://t.co/CxQxT258D6https://t.co/JT4bZ68wps
Urgent Action Required: Brutal Killing of Newborn Puppies@eenadulivenews @TV9Telugu @tv5newsnow @mkstalin @Udhaystalin @AwbiBallabhgarh @peta @PetaIndia
சமூக வலைதளத்தில் ‘Khan’ எனும் பயனர் “எங்கள் சமூகத்தில் நடந்து கடந்த ஒரு கொடூரமான மிருகத்தனத்தை பற்றி விரைவாகத் தகவல் தர விரும்புகிறேன். ஒரு நபர், பிறந்த சில நாட்களேயான நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து, சுவரில் போட்டு கொலை செய்தார்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் PETA இந்தியாவை டேக் செய்துள்ளார்.

அபார்ட்மென்ட் குடியிருப்பினர் ஆஷிஷிடம் இது குறித்து கேட்ட போது “நாய்க்குட்டிகள் என் நாயை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தான் நான் இதைச் செய்தேன்” எனக் கூறினார். சிசிடிவி காட்சிகளில் இவர் குறும்படமாகவே அந்த நாய்க்குட்டிகளை தூக்கி அடித்து கொல்வது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது வரை அவரது மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் மிருகங்களுக்கு எதிரான வன்முறைகள் பல சட்டங்கள் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
