பகீர் வீடியோ... காதலனுடன் சென்ற மகளை வெட்டிக் கூறு போட்ட தந்தை!

 
 நயீம் கான்
காதலனுடன் ஊரை விட்டு தப்பிச் சென்ற மகளைத் தேடி கண்டுபிடித்து வெட்டி கூறு போட்டு அதிர வைத்திருக்கிறார் தந்தை ஒருவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் வசிப்பவர் நயீம் கான். இவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நயீமின் 17 வயது மகள் உள்ளூர் இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆர்வம் காட்டாத நயீம் கான் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.


இந்நிலையில், நயீமின் மகள் காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மகளைக் கண்டுபிடித்த தந்தை அவளை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கி  வெட்டினார். மகளின் கை, கால்களை கோடரியால் வெட்டிய தந்தை, மகளின் உடல் அருகே அமர்ந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web