பகீர் வீடியோ... மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இளைஞன் அடித்துக் கொலை!

 
சாபிர்

அரியானா மாநிலத்தில், மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி இளைஞன் ஒருவனை பசுப் பாதுகாப்பு குண்டர்கள் அடித்தே கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரைச் சேர்ந்த இளைஞர் சாபிர் மாலிக், அரியானா மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு சென்றுள்ளார். அந்த பகுதியில் பழைய வேஸ்ட் பேப்பர்களை எடுத்து வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி சாபிர் மாலிக், தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு, தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்து சாப்பிட்டதாக சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில்  வெளியாகி வைரலானது. இவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில்  சாபிரை தாக்கியதாக பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அரியானா மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் பசுவைக் கொல்வதும், மாட்டிறைச்சியை சமைப்பதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்துக் கொண்டு  இது போன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web