விபத்தில் துடிதுடித்து இளைஞர் பலி... கண்டுக்கொள்ளாமல் லாரியில் திருடிச் சென்ற பொதுமக்கள்!

 
பால் பால்

விபத்தில் காயமடைந்தவரைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருக்கிறார். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஒரு கூட்டம், லாரியில் இருந்து சிந்திய பாலைப் பாத்திரங்களிலும், பாட்டில்களிலும் பிடித்து திருடிக் கொண்டிருந்தார்கள். இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதுமே இந்த வீடியோ வைரலாகி, கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் லாரி ஓட்டுனர் 45 வயது  பிரேம்சகார். இவர்  நேற்று உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்-மீரட் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் லாரியை ஓட்டி சென்றார். அந்த சமயத்தில் திடீரென  சாலையின் எதிர்புறத்திலிருந்து வந்த லாரி ஒன்று பால் டேங்கரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பால் டேங்கரிலிருந்து பால் சாலையில் கொட்டத் தொடங்கின.

அந்த பகுதியில் வசித்தவர்கள் உடனே வீட்டிற்கு ஓடிச்சென்று கிடைத்த பாட்டில் பாத்திரங்களில் போட்டி போட்டுக் கொண்டு பாலை பிடித்து சென்றனர்.  வந்தவர்களில் ஒருவரேனும்  விபத்தில் டிரைவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதும் அதனை கவனிக்காதமாதிரி சென்றுவிட்டனர்.  பொதுமக்கள் மனிதநேயத்தை தொலைத்து  பாலை பிடிப்பதற்காக சென்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ  சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிருக்கு போராடிய ஓட்டுனரான பிரேம் சகார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஓட்டுனரான பிரேம் சகாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா