அதிர்ச்சி வீடியோ... உணவு திருடியதற்காக காரில் கட்டி வைத்து இளைஞனைத் தாக்கிய உரிமையாளர்!
உணவகம் ஒன்றில் இருந்து உணவைத் திருட முயன்றதற்காக இளைஞனை கார் மீது கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் தம்பாலா பகுதியில், கார் ஒன்றின் முன் புறத்தில் இளைஞர் ஒருவை அடித்து உதைத்த கட்டி வைத்த வீடியோ வைரலான நிலையில், போலீசார் இந்த வீடியோவின் பின்னணி குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பவத்தில், அந்த நபர் உள்ளூர் கடை ஒன்றில் இருந்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் உணவுகளைத் திருட முயன்றார். பின்னர் அவர் கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்களால் பிடிபட்டார்.
सोशल मीडिया पर वायरल हो रहा वीडियो गुजरात के गोधरा का बताया जा रहा है। कार से बंधे शख्स पर चोरी का आरोप है। चोरी के आरोप में कुछ लोगों ने उसे कार के बोनट से बांध दिया। जैसे ही यह वीडियो वायरल हुआ, पुलिस ने इसका संज्ञान लिया और दोषियों के खिलाफ कार्रवाई शुरू कर दी।#Godhra… pic.twitter.com/UqG4cVZhaJ
— Lallu Ram (@lalluram_news) August 31, 2024
பின்னர், அவர்கள் அந்த திருடனை அடித்து உதைத்தனர். பின்னர், கொட்டு மழையில் ஒரு காரில் கட்டப்பட்டு தம்பாலா பகுதியைச் சுற்றி வந்தது. அதைச் சுற்றியுள்ளவர்கள் ஒரு வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வைரலான வீடியோ காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் எதிராக காவல்துறையினர் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். உணவு திருடியாதல் அடித்து உதைத்து காரில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா