ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் அதிர்ச்சி... காரில் எரிந்தபடி 3 சடலங்கள்!

 
தும்கூரு கார் விபத்து

ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் 3 சடலங்கள் எரிந்து கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் தும்கூரு அருகே உள்ள குஞ்சங்கி கிராமத்தில் தண்ணீர் இல்லாத ஏரியில் கார் எரிந்து கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். எரிந்த காருக்குள் மூன்று சடலங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, காரின் நம்பர் பிளேட்டை ஆய்வு செய்தனர். விசாரணையில், தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபீக் என்பவரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டிருந்ததும், இருப்பினும் இறந்தவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்னர் காரில்; சடலங்களை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் இல்லாத ஏரியில் கார் எப்படி வந்தது? காரை தீ வைத்தது யார்? கொலை செய்து காருடன் எரிக்கப்பட்டதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web