இன்று புனித வெள்ளி... தேசிய பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

 
ஷேர் பங்குசந்தை சாப்ட்வேர் மென்பொருள் கம்ப்யூட்டர் சைபர் க்ரைம்
இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். புனித வெள்ளியை முன்னிட்டு இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து மொத்தமாக மூன்று நாட்களுக்கு வர்த்தக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு வர்த்தக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 25ம் தேதி ஹோலி பண்டிகைக்காக பங்குசந்தை வர்த்தகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மார்ச் 29ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share Market

இன்று மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகியவற்றில் வர்த்தகம் இருக்காது.  இந்த இரண்டு விடுமுறைகளும் ஒரே வாரத்தில் வருவதால், மார்ச் 25-29 வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பங்கு சந்தை வர்த்தகம் நடைப்பெற்றது. 

விடுமுறை

2024ம் ஆண்டு மார்ச் 29 அன்று, புனித வெள்ளியை முன்னிட்டு காலை மற்றும் மாலை பிரிவுகளில் வர்த்தகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web