மீண்டும் வேளாண் சட்டங்களை கொண்டு வருவோம்- பா.ஜ.க எம்.பி பேச்சு..!!

 
மீண்டும் வேளாண் சட்டங்களை கொண்டு வருவோம்- பா.ஜ.க எம்.பி பேச்சு..!!

தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுது மக்களவை உறுப்பினர் சாக்‌ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த குநானக் ஜெயந்தி நாளில் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக அறிவித்திருந்தார்.

எதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதை தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த பலனாக இது பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் தேர்தல்களை மனதில் வைத்தே மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து பேசிய உ.பி மாநில எம்.பி சாக்‌ஷி மகராஜ், இந்தியாவில் பிரதமர் மோடிக்கு மாற்றாக யாரும் கிடையாது. அதேபோல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் மாற்று இல்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது பிரதமர் மோடியின் பெரிய மனசை காட்டுகிறது. தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என எம்.பி சாக்‌ஷி மகராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web