எத்தனை முறை சொன்னாலும் கேட்கலை.... ரீல்ஸ் வீடியோவுக்கு அடிமையான மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!

 
இன்ஸ்டா

நடுராத்திரியில் எழுந்து வீடியோ பதிவு செய்வது.. அதிகாலையில் வீடியோ பதிவு செய்வது என்று எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு வந்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி பிரம்மவர்சாலி கிராமத்தில் வசிப்பவர்கள் கிரண் உபாத்யா (30), ஜெயஸ்ரீ (28). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையில், ரீல்ஸ் செய்ய அடிமையான ஜெயஸ்ரீ, எப்போதும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இன்ஸ்டா

இதையடுத்து நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். இதையடுத்து ஜெயஸ்ரீ மீண்டும் அதிகாலையில் செல்போனை பயன்படுத்தியதால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ​​ஆத்திரமடைந்த கணவர் கிரண், ஜெயஸ்ரீயை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக கீழே விழுந்தார்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

தகவல் அறிந்ததும் கோட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் கிரணை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web