பெட்ரோல் விலை குறையுமா? அவசர கையிருப்பு கச்சா எண்ணெய் பேரல்கள் ரிலீஸ் !!

 
பெட்ரோல் விலை குறையுமா? அவசர கையிருப்பு கச்சா எண்ணெய் பேரல்கள் ரிலீஸ் !!


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் இந்த மூன்றும் விலை உயர்வில் உச்சம் தொட்டுள்ளன. நடுத்தர மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

பெட்ரோல் விலை குறையுமா? அவசர கையிருப்பு கச்சா எண்ணெய் பேரல்கள் ரிலீஸ் !!

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கையிருப்பில் சில குறிப்பிட்ட அளவு வைத்திருக்கும். அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு 5 மில்லியன் கச்சாய் எண்ணெய் பேரல்களை அவசர கால இருப்பில் இருந்து விடுவிக்க உத்தேசித்துள்ளது.


இதில் இந்தியாவை பொறுத்தவரை 3 இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் கையிருப்பு உள்ளது.இதில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் செயற்கையான நெருக்கடியை உருவாக்கியும் விலையை உயர்த்துகின்றன.இது எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தலாம் என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை குறையுமா? அவசர கையிருப்பு கச்சா எண்ணெய் பேரல்கள் ரிலீஸ் !!


இந்த அறிக்கை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்குள் கச்சா எண்ணெய் பேரல்களை பயன்பாட்டுக்கு எடுக்கலாம் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதிலும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா 3வது இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web