பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், மாடலாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சலின் என்கிற நண்பர் அறிமுகமாகியுள்ளார். இவருடைய அழைப்பின் பேரில் கடந்த 3-ம் தேதி கொச்சினிலுள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அறை சலின் தங்கி இருந்த அறைக்கு போனபோது, ஏற்கனவே அந்த அறைக்குள் இரண்டு பேர் இருந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர், மேலும் கஞ்சா போதை உட்கொண்டதும் பெண்ணுக்கு புரிந்துள்ளது.

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

அதனால் வெளியேற முயற்சித்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்து, அவரை மயக்கமடையச் செய்து மூன்று பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த பெண், உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

உடனடியாக போலீஸுக்கு சென்று புகாரளித்தார். அதன்பேரில் அவருடைய நண்பர் சலின் என்பவரை கைது செய்துள்ளனர். பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மற்ற இருவர் அஜ்மல் மற்றும் ஷமீர் என்று தெரியவந்துள்ளது.

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

சலின் கைது செய்த தகவலை அறிந்துகொண்ட இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான இருவரையும் அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web