கொடூரம்... நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு... வருங்கால மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலாத்காரம் செய்து ரோட்டில் வீசிச் சென்ற கொடூரம்!
தானே மாவட்டத்தில் பள்ளி சிறுமிகள், ஊழியர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பள்ளியிலேயே உங்களால் பாதுகாப்பு தர முடியவில்லை என்றால், கல்வி அனைவருக்குமான உரிமை என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து படுகொலைச் செய்யப்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சியாக திருமணத்திற்காக தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர், தனியே காரில் அழைத்து சென்ற இளைஞன், ஹோட்டல் அறையில் மிருகத்தனமாக இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். அதன் பின்னர், தனது நண்பர்களையும் வருங்கால மனைவியை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்து, காரில் இருந்து சாலையில் தூக்கி வீசி விட்டு நண்பர்களுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு அன்ஷூ சவுத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தனது வருங்கால கணவர் அழைக்கிறார் என்று அவருடன் ரிஷிகேஷ் சென்றுள்ளார். இருவரும் ரிஷிகேஷ் சென்றதும் அங்கே ஹோட்டலை அடைந்திருக்கிறார். ஹோட்டல் அறைக்குள் சென்றதும் அன்ஷுவின் நடத்தை வன்முறையாக மாறியது. அறைக்குள் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்து அவளது உடலின் 8 வெவ்வேறு பகுதிகளில் மிருகத்தனமாக கடித்து வைத்திருக்கிறான். மிகுந்த உடல் வலி மற்றும் அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண், கல்யாண கனவுகள் அத்தனையும் நாசமாக போன அதிர்ச்சியிலும், வருங்கால கணவன் இத்தனை மிருகத்தனமானவனா என்கிற அதிர்ச்சியிலும் காஜியாபாத் திரும்புவதை நோக்கி காத்திருந்துள்ளார்.
आशु चौधरी अपनी मंगेतर को ऋषिकेश ले गया उसने होटल में वहशीपन की सभी हदें पार कर दी, मंगेतर से रेप किया उसके शरीर पर 8 जगह पर दांत से काटने के निशान है, उसकी हरकत यही नही थमी गाज़ियाबाद वापसी के दौरान उसने अपने दोस्तों को फोन कर बुलाया तीन दोस्तो ने भी लड़की से छेड़छाड़ की और… pic.twitter.com/jnmXDjuzr4
— Lokesh Rai (@lokeshRlive) August 30, 2024
காஜியாபாத்திற்குத் திரும்பும் போது, அன்ஷு தனது மூன்று நண்பர்களான ஆதித்யா கபூர், யாஷ் அவுஜல் மற்றும் முஸ்தபா ஆகியோரை தன்னுடன் காரில் பயணிக்க அழைத்துள்ளார். காரில் அன்ஷுவின் நண்பர்கள் 3 பேர் ஏறியதும், இளம்பெண்ணை காருக்குள் வைத்து 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் காஜியாபாத் வரும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சாலையில் இளம்பெண்ணைத் தூக்கி எறிந்து விட்டு, அங்கிருந்து காரில் இவர்கள் கிளம்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் தைரியமாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து புகார் அளித்தார். இளம் பெண்ணின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை விரைந்து விசாரித்தனர். அன்ஷு சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் ஆதித்யா கபூர், யாஷ் அவுஜல் மற்றும் முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதி கிடைப்பதை உறுதி செய்ய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரமான வன்முறை வழக்கு பாதிக்கப்பட்ட பெண் தனது சொந்த வருங்கால கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளின் கைகளில் எதிர்கொள்ளும் கொடுமையை எடுத்துக்காட்டுகிறது. போலீசாரின் சரியான நேரத்தில் கைது செய்த நிலையில், குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்துள்ளன, ஆனால் இதுபோன்ற கொடூரமான கொடூரமான செயல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா