மோடி அரசால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பு... ஹரியாணா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு!
மோடி அரசு, குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக செயல்பட்டு வருவதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
ஹரியாணாவில் அஸ்ஸாந்த் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'பாஜக அரசினால் ஹரியாணா அழிந்து விட்டது. நாட்டில் வேலைவாய்ப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் பிரதமர் மோடி.
சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு ஹரியாணாவைச் சேர்ந்த சில இளைஞர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் இங்கு வேலைவாய்ப்பு இல்லாததால் அகதிகளாக அங்கு சென்றுள்ளனர். அவர்கள் ஏன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும்? அவர்கள் தங்கள் சொந்த நிலங்களை விற்று 30 - 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்து அமெரிக்கா சென்றுள்ளனர்.
அந்த தொகையை வைத்து அவர்கள் ஹரியாணாவில் சொந்தமாக தொழில் தொடங்கலாம். ஏழையாக இருந்தால் பாஜக அரசு, வங்கிக்கடன் கொடுக்க மறுக்கிறது. நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என அனைத்தும் அதானியின் வசம் உள்ளன. ஆனால் சிறு, குறு வணிகர்கள், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பை எதிர்கொள்கின்றனர். சில தொழிலதிபர்களுக்காக மோடி அரசு செயல்படுவதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்கவில்லை. பதிலாக, பணக்காரர்களின் 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்தால் இங்குள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவோம்' என்று பேசியுள்ளார். ஹரியாணாவில் வருகிற அக்டோபர் 5ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!