தன்னந் தனியாக உலகைச் சுற்றி வந்து சிறுவன் சாதனை! கின்னஸிலும் இடம் பிடித்தார்!

 
மேக் ரூதர்போர்டு

தன்னந் தனியாக 17 வயது சிறுவன், சிறிய விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் பல்கேரிய நாட்டில் நடந்தேறியுள்ளது.

பல்கேரியா நாட்டில் சோபியாவை வசித்து வரும் சிறுவன் மேக் ரூதர்போர்டு. இந்த சிறுவனுக்கு வயது 17. இவர் உலகை தன்னந்தனியே சுற்றிவந்து சாதனை படைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக ஆசைப்பட்டு வந்தார். அது தற்போது நிறைவேறியுள்ளது. மைக்ரோலைட் என்ற சிறிய விமானத்தில் சிறுவன் மேக்ரூதர்போர்டு உலகத்தை தன்னத்தனியே சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ட்ராவிஸ் லட்லோவின் என்ற 18 வயது இளைஞர் இந்த சாதனையை புரிந்தார். தற்போது இது பல்கேரிய சிறுவனால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேக் ரூதர்போர்டு
கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தை தொடங்கிய மேக் ரூதர்போர்டு மொத்தம் 5 கண்டகளில் உள்ள 52 நாடுகளை கடந்துள்ளார். ஆப்பிரிக்கா, வளைகுடா பகுதி வழியாக இந்தியா, சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தாண்டி சிறிய விமானத்தில் 5 மாதங்களில் கடந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளான்.

மேக் ரூதர்போர்டு
5 மாதங்கள் சிறிய விமானத்தில் பறந்து சாதனை படைத்த பின்னர் சோபியா விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறுவன் மேக் ரூதர்போர்டு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ‘‘நீங்கள் எவ்வளவு வாயதானவராக இருந்தாலும் உங்கள் கனவை நனவாக்க உழையுங்கள்.

இலக்குகளை அடைய முன்னேறுங்கள்’’ என்று அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த பொது மக்கள் மேக் ரூதர்போர்டுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கனவுகளை நிறைவேற்ற வயது ஒரு தடையில்லை என்பதை சிறுவன் நிரூபித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web