அதிரடியாக சரிந்த தங்கம்!! சவரனுக்கு ரூ.264 குறைவு!!

 
Gold Bangles in vertical

தங்கம் மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டெ இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

Gold Bangles

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று விலை இறக்கத்துடன் தொடங்கிய நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56-க்கு குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 33 ரூபாய் குறைந்து, ரூ.4,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனையாகிறது. 

தங்கம் விலை குறைவு

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,008-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 27 ரூபாய் குறைந்து, ரூ.3,981-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web