நெகிழ்ச்சி! பன்றிக்கு பால் கொடுத்து பசியாற்றிய பசு!

 
பன்றிக்கு பால் கொடுத்த பசு

மனிதர்கள் தான் ஜாதி, மதம், மாநிலம், நாடு என்று எல்லாவற்றிலும் பாகுபாடு பார்த்து வேறு பட்டு நிற்கிறோம். விலங்குகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருப்பது பல்வேறு சந்தர்பங்களில் நிரூபணமாகியுள்ளது. கடந்த கிருஷ்ண ஜெயந்தியன்று பசு ஒன்று பன்றிக்கு பால் கொடுத்து பசியாற்றிய சம்பவம் கர்நாடக மாநிலம் வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சில விலங்குகள் தன் இனமில்லாத பிற விலங்குகளுக்கு பால் கொடுத்து தனது தாய்மையை வெளிக்காட்டும். நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட சில விலங்குகள் மற்ற இனத்தைச் சேர்நத விலங்குகளுக்கு பால் கொடுக்கும் வீடியோ, புகைப்படங்களை நாம் பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்போம்.

krish

கர்நாடக மாநிலம் சுரபுரா பகுதியில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்ற போது இந்த அதிசயம் நிகழ்ந்தது. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் வராகம் எனப்படும் பன்றியின் அவதாரமும் ஒன்று. கோமாதா என்று அனைவராலும் கடவுளாக வணங்கப்படும் பசு, கிருஷ்ணஜெயந்தியன்று பன்றிக்கு பால் கொடுத்தது. பன்றி பால் குடித்துக் கொண்டிருக்கும் போது, பசுவின் கன்று  அதன் அருகே வந்து அமைதியாக நின்றிருந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பசு

இது குறித்து தேவபூர் மடத்தின்  சிவமூர்த்தி சிவாச்சாரியார் கூறும்போது, ‘‘கிருஷ்ணஜெயந்தியன்று, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக வராகம் பசுவிடம் பால் அருந்திய சம்பவம் மிகவும் விசேஷமானது. இதைத்தொடர்ந்து கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ‘‘இதைத்தொடர்ந்து பொது மக்கள் பசு மற்றும் பன்றிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web