அதிர்ச்சி! 10,00,000 வீடுகள் சேதம்! 1,000 பேருக்கு மேல் மரணம்! பதறும் பாகிஸ்தான்! வெள்ளத்தால் கடும் பாதிப்பு!

 
பாகிஸ்தான் மழை வெள்ளம்

அண்டை நாடான பாகிஸ்தான் பதறுகிறது. சுற்றிலும் மரண ஓலம். அடுத்த நாள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க எல்லாம் நேரமில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்கிற கதியில் கதறுகிறார்கள் மக்கள். கொடுமையாக கிட்டத்தட்ட 10 லட்சம் வீடுகள் இடிந்து, இந்த மழை வெள்ளத்தில் சேதமடைந்திருக்கிறது. வீடு இழந்து, கையில் எதை எடுத்துச் செல்வது என தெரியாமல் குழம்பி, உயிரைப் பிடித்துக் கொண்டு நீரில் இறங்கி தத்தளிக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தான் நாட்டில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் வீடு அடித்து செல்லப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் சீதோஷ்ண மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக இதுவரை நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மக்களை மீட்க அந்நாட்டு அந்நாட்டு அரசு ராணுவ உதவியை கோரியுள்ளது. இந்த பாதிப்புகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். 

இந்த கனமழை காரணமாக தற்போது வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து உணவில்லாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை வெள்ளம் பாகிஸ்தான்

இந்நிலையில் சர்சட்டா, நவ்ஷேரா ஆகிய இடங்களில் மழைநீரால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் மக்களின் வீடுகள் அடித்து செல்லப்படும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பெரம் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவித்துவரும் நிலையில், தற்போது வெள்ள பாதிப்பு அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web