தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு! ஆடி மாதம் முடிஞ்சதும் மேலும் உயரும்!

 
தங்கம்

ஆடி மாதம் முடிந்ததும், வரிசையாக முகூர்த்த நாட்கள் வருகின்றன. நிறைய திருமணங்களும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பொதுவாக தமிழர்கள் ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த திடீர் தங்கத்தின் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா பெரிய தங்க உற்பத்தியாளராக இல்லாத போதிலும், உலகத்தில் உள்ள தங்கத்தின் ஒரு பெரிய பகுதியை இருப்பில் வைத்திருக்கிறது. அதனால் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும், தங்கத்தை அமெரிக்க டாலரில் கொடுத்து வாங்குகின்றன. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். எனவே, நிறுவனங்கள் இறக்குமதி செய்ய அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். 

தங்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து விற்பனையாகி வரும் நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40-க்கு உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் உயர்ந்து, ரூ.4,914-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, ரூ.39,312-க்கு விற்பனையாகிறது. 

தங்கம் நகைக்கடை

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,006-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 19 ரூபாய் உயர்ந்து, ரூ.4,025-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ரூ.64,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web