உஷார்... வீட்ல இதெல்லாம் இருந்தா செல்வம் எப்பவுமே நிலைக்காது!

 
பணம் ரூபாய் சில்லறை சேமிப்பு

எவ்வளவு சம்பாதித்தாலும் செல்வம் வீட்டில் நிலையாக தங்கவில்லை என்று புலம்புகிறீர்களா? இதையெல்லாம் ஒருமுறை செக் பண்ணி பாருங்க. ஆனால், ஒரேயடியாக வாஸ்து என்று மூடநம்பிக்கையிலும் உழலாமல் அவசியமான, அதிக செலவில்லாத இந்த விஷயங்களைப் பின்பற்றலாம். அந்த சுவரை இடிச்சுட்டு, புதுசா ஒரு படிக்கட்டு கட்டிடுங்க என்கிற மாதிரியான வாஸ்து செய்திகளை புறந்தள்ளிடுங்க. இது உங்களை பயமுறுத்துவதற்கான கட்டுரை கிடையாது. ஆனால், எளிதில் செய்ய முடிகிற பரிகாரங்களை செய்வதும், கடைப்பிடிப்பதும் நம் கைகளில் தானே உள்ளது.

இந்த விஷயங்களை எல்லாம் நம் வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தால், அப்புறமா நிச்சயமா செல்வம் நம்ம வீட்ல தங்காமலேயே போய் விடும். இது எதிர்மறையான வைப்ரேஷன்களைத் தரும் என்பது அறிவியல் ரீதியிலான நிரூபணம். செல்வம் என்றால் மகாலட்சுமி தானே? அப்போ.. மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாம் நம்ம வீட்ல இருக்க கூடாது என்பது தானே லாஜிக். உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா எதிரிக்கு வீட்ல விருந்து வெச்சு கொண்டாடிக்கிட்டே விருந்தினரை அழைத்தால், அவங்க எப்படி வருவாங்க? அதைப் போல தான். 

வீடு என்பது நாம் வசிக்கும் இடம் மட்டும் கிடையாது. அந்த வீடு நமக்கு நிம்மதியையும்,  ஆரோக்கியத்தை செல்வத்தையும் முழுமையாக தந்து பெரு மகிழ்ச்சி அந்த வீட்டில் நிலைக்க வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல், வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதும், எப்போதும் சண்டை சச்சரவுகள் என அமைதியற்ற சூழல் , ஏதோ ஒரு உருவம் இருட்டில் தென்படுவது அல்லது துர்நாற்றம் ஏற்படுவது போன்றவற்றை உணர்ந்தால் அந்த வீட்டில் ஏதோ தீய சக்தி இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.

பெண் கண்ணாடி கல்லூரி மாணவி

ஆக்கப்பூர்வமான பாசிட்டிவ் நேர்மறை எண்ணங்கள் வீட்டில் நிறைந்திருக்கும் போது அங்கு மகிழ்ச்சி தங்கும். மகாலட்சுமி குடி இருப்பாள். குப்பையும் கூளமுமாய் சுத்தமிலாத வீடு தரித்திர நிலையை நோக்கி செல்லும்.அழகுப்படுத்துகிறோம் என்ற எண்ணத்தில் கண்களில் படும் படங்கள் பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கக்கூடாது.

வீட்டில் இருந்து   தீய சக்திகளை விரட்ட செய்ய வேண்டிய 7 முக்கியமான விஷயங்கள் 

உடைந்த சிலைகள், கண்ணாடி மற்றும் கிழிந்த படங்கள் 

உடைந்த சிலைகளை , விரிசல் விட்ட கண்ணாடி , மங்கிப் போய் கிழிந்த படங்கள் இவையெல்லாம் வீட்டில் இருப்பது நல்லதல்ல. இவை வேற்று சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருபவை. தோஷத்தை ஏற்படுத்தி குடும்ப சொத்துக்களை இழக்க நேரிடும். வீட்டில் உடைந்த கண்ணாடியை வைத்திருக்க கூடாது. அவை வீட்டிற்குள் தீய சக்தியை கொண்டு வரும் மேலும் வாஸ்து தோஷம் ஏற்படுத்தி செல்வங்களை விரயமாக்கி விடும்.

வாடிய வாழை இலை, வெற்றிலை கூடாது 

வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார்.வீட்டில் வாடிய வாழை இலையோ வெற்றிலையோ இருக்கக்கூடாது. இந்த வாடிய இலைகள் அதிகப்படியாக நெகட்டிவ் எண்ணங்களை கொண்டு வரும். அசதி, சோர்வு ஆகியவை உருவாகிவிடும்.

கடிகாரம்

முட் செடிகள் வேண்டாமே!

வீட்டு பால்கனியில் , தோட்டத்தில் செடிகள் நமது கண்களையும் மனதையும் நிறைய செய்வது தான். ஆனால் அலங்காரம் என்ற பெயரில் காய்ந்த சருகான, முட்களை உடைய செடிகளை வைக்க கூடாது. நல்ல சக்தி வீட்டில் பரவுவதை அவை தடுக்கின்றன. வீட்டில் செல்வாக்கு மற்றும் செல்வம் பெருகுவதற்கு இவை தடை செய்கின்றன. 

தண்ணீர் சிந்துவது

அலுவலகமோ வீடோ எந்த இடம் என்றாலும் தண்ணீர் வீணாகி கசியும் குழாய்கள் இருந்தால் .அதை உடனே சரி செய்யுங்கள். ஏனெனில் அங்கு வீணாவது வெறும் தண்ணீர் மட்டுமல்ல இதனால் பாடுபட்டு சேர்த்த  செல்வமும் பல்வேறு வகைகளில்  விரயமாகும்.

ஓடாத கடிகாரம் ஓட்டாண்டியாக்கி விடும் 

காலத்தைக் காட்டும் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் போது தான் அதன் கடமையை செய்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி, சக்திகளின் ஓட்டத்தை கடிகாரம் பாதிக்கும். ஓடும் கடிகாரம் நல்ல சக்தியையும் நின்று போன கடிகாரம் கெட்ட சக்தியையும் கொண்டு வரும். ஓடாத கடிகாரம்   செல்வம் மற்றும் செல்வாக்கை  இழக்கச் செய்யும். உடனே ஓடாமல் நின்று போன கடிகாரத்தை  சரி செய்து விடுவோம் அல்லது தூரப்போடவும்.

தலை முடி, குப்பைகள் மூலையில் சேர்ந்தால் மூதேவி வாசம் உறுதி

இன்றைய நவீன நாகரீக காலத்தில் , பல வீடுகளில் தலை முடிகள் குப்பைகள், கட்டிலின் அடியிலும் வீட்டின் சுவர் மூலைகளிலும் குவிந்து கிடக்கிறது. இது அந்த வீட்டில் மூதேவியை கொண்டு வந்து சேர்த்து விடும். வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க ஶ்ரீதேவி வாசம் உறுதி

சிலந்தி வலை கூடவே கூடாது.

வீட்டில் செல்வமும் ஒற்றுமையும் தழைக்க முதலில் வீடு குப்பைகள் இன்றி சுத்தமாக இருக்க வேண்டும் இது அடிப்படை. வீட்டின் சுவர்களில் விரிசலோ அல்லது சுவர்களில் சிலந்தி வலையோ கண்களில் பட்டால் உடனே அதை சரி செய்யப்பட வேண்டும்.

வீட்டில் அமையும் சிலந்தி வலை வாழ்க்கையை மிக சிக்கலாக்கி விடும்.அது வீட்டினுள் கெட்ட சக்தியை கொண்டு வரும். இதனால் தான் நம் முன்னோர் தொடர்ந்து வீட்டை பெருக்கி துடைத்து ஒட்டடை அடித்து சுத்தமாக வைத்திருந்தார்கள் .மேலும் வீட்டின்  நுழைவாயிலை சுத்தமாக மஞ்சள் குங்குமம் பூசி   தோரணங்கள் தொங்கவிட்டால், வீட்டில் நல்ல சக்தி பெருகும்.  இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால் வீட்டில் மங்களம் தங்கும் .செல்வம் பெருகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web