உஷார்... ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு... உடனே இதைப் பண்ணுங்க!

 
ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும், தங்களது ரேஷன் அட்டையில், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க கால அவகாசம் டிசம்பர் மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் விரைவில் ஆதார் கார்டுடன் eKYC சரிபார்ப்பு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரேஷன் சலுகைகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. ரேஷன் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

Ration-Shop

உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால் பயனாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் டிசம்பர் மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களது ரேஷன் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பதிவிட வேண்டும். இதற்கு, ஆதார் KYC சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும். ரேஷன் கடையில் உள்ள இயந்திரம் அல்லது ஆதாரின் புகைப்பட நகல் மூலம் இந்த வேலையை நீங்கள் முடிக்கலாம்.

Ration card

தீபாவளி பண்டிகையின் போது பெரும்பாலான மக்கள்சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள். அங்கேயே ரேஷன் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் ரேஷன் உதவிகளை வெவ்வேறு இடங்களில் பெறமுடியாது. அதாவது, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது அவசியம்.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர் இறந்தாலோ அல்லது ஆதார் பதிவு செய்யாமல் எங்கு சென்றாலும் தகவல் கொடுக்க வேண்டும். அதை ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும். பயனாளிகளின் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு பொருந்தாத பட்சத்தில், பயனாளிக்கு ஒரு கடிதம் மூலம் ஆதார் பதிவு செய்ய எச்சரிக்கை செய்யப்படும்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web