மிஸ் பண்ணாதீங்க... இன்று முதல் தங்கப்பத்திரம் விற்பனை துவக்கம்!

 
திருச்சியில் தொடரும் கடத்தல்! ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

மிஸ் பண்ணாதீங்க. அசத்தலான, பாதுகாப்பான முதலீடு. அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை தபால் நிலையங்ளில் தங்கப்பத்திரம் விற்பனை இன்று பிப்ரவரி 12ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரத்தை வாங்கலாம்.

முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாக இருக்கும் 8வது ஆண்டின் முடிவில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப்பத்திரம் பணமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இடையில் தேவைப்பட்டால் 5 ஆண்டு முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை முன் முதிர்வு செய்து கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலம் 2.5 சதவீத வட்டி கணக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.  இத்திட்டம் இன்று பிப்ரவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை அமலில் இருக்கும். ஒரு கிராம் விலை ரூபாய் 6 ஆயிரத்து 263என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது.

போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம் அஞ்சல் தபால் சிறுசேமிப்பு

அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த திட்டத்தின் மூலமாக முதலீடு செய்யலாம் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் அல்லது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல் ஆகிய ஆவணங்கள் தேவையாக இருக்கும், தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் தங்க மதிப்பிற்கு சேமிக்கலாம். தபால் அலுவலகங்களில் சிரமமாக இருந்தால், உங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூலமாகவும் தங்கப்பத்திரம் வாங்கலாம். 

திருடு போகும் என்ற கவலையில்லை. மண்ணிலும் பொன்னிலும் செய்யப்படும் முதலீடு என்று மோசம் போகாது என நம் முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மிண் பண்ணாம உடனே வாங்குங்க. பாதுகாப்பான முதலீடு. இந்த தங்கப்பத்திர முதலீட்டிற்கு வட்டியும் உண்டு. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web