பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை கர்ப்பம்?! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டிற்குள், பிரபல நடிகை அங்கிதா, கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ப்ரெக்னன்ஷி கிட்களுடன் வலம் வந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்திய மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியில் ஹிட்டடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல சீசன்களாக வெளியாகி வருகிறது.
இந்தியில் தற்போது 17வது சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் பார்வையாளர்களும் அதிகம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது, 100 நாட்களில் பிரபலமடைவதற்கும், சினிமாவில் நுழைவதற்குமான விசிட்டிங் கார்ட்டாகவே பார்க்கப்படுகிறது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல 2017 ல் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர் கர்ப்பமான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் 17' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அங்கிதா லோகாண்டே, தனது மாதவிடாய் காலத்தை தவற விட்டதாகவும், இதனால் கர்ப்ப பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் திரைப்பட நடிகையான அங்கிதா லோகாண்டே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட தோனி பட புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!