மும்பை மெட்ரோ நிலையத்தில் நெகிழ்ச்சி... பூனைக்கு கௌரவப் பட்டம் வழங்கி சிறப்பிப்பு!

 
பூனை மெட்ரோ

மும்பை குண்டாவலி மெட்ரோ ரயில் நிலையத்திற்குத் தினசரி வந்து செல்லும் பூனை ஒன்றுக்கு, மும்பை மெட்ரோ நிர்வாகம் 'தலைமை பூனை அதிகாரி' என்ற கௌரவப் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சந்தேஷ் என்ற சமூக வலைதளப் பயனர் ஒருவர், குண்டாவலி மெட்ரோ நிலையத்தைக் கூர்மையாகக் கவனித்து, பயணிகளிடம் அன்பாகப் பழகும் இந்த பூனைக்கு ஒரு கௌரவப் பொறுப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

மெட்ரோ ரயில்

இந்த சுவாரஸ்யமானக் கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் அப்பூனைக்குத் 'தலைமை பூனை அதிகாரி' என்ற பட்டத்தை வழங்குவதாகப் புகைப்படத்துடன் அறிவித்தது.

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளைத் தனது அன்பான நடத்தையால் களிப்பில் ஆழ்த்தி வரும் இந்தப் பூனைக்குக் கிடைத்த கௌரவம், இணையவாசிகளிடையேயும் பயணிகள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்று வைரலாகி வருகிறது.