விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்... செப்.15 வரை ஆவின் நெய் ரூ.10 விலைக்குறைப்பு!

 
ஆவின் நெய் விலை உயர்வு
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆவின் நெய் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு செப்டம்பர் 16ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தசரா கொண்டாட்டம், தீபாவளி என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், ஆவின் நெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை, பால் பொருட்கள் தயாரிப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நிறுவனம் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக உற்பத்தி செய்து  வருகிறது.

ஆவின்

இது  பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் விசேஷ நாட்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை குறைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 7 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அதன் பின்னர் வரும் தசரா, நவராத்திரி விழாக்கள் என அடுத்தடுத்து பண்டிகைகள்,  விசேஷ நாட்கள் வருகிறது.

ஆவின்

பலகாரங்களும், பட்சணங்களும் இல்லாமல் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது தானே? அதனால் நெய்யின் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை ரூ85க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 100 மிலி ஆவின் நெய் இனி ரூ.75க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.  இந்த சிறப்பு தள்ளுபடி  செப்டம்பர் 15 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web