குட் நியூஸ்... வீட்டு இ.எம்.ஐ.யில் மாற்றமில்லை... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயரும்... ரிசர்வ் வங்கி தகவல்!

 
ரிசர்வ் வங்கி
வரும் 2025ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே குறிப்பாக வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.செலுத்துபவர்களிடம் நிம்மதியடைய செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக ஆலோசிப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், முந்தைய 6.5 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதற்கான வாக்கெடுப்பில் 6 பேரில் 5 பேர், ரெப்போ விகிதத்தை மாற்ற வேண்டாம் என வாக்களித்ததால் முந்தைய விகிதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இது உயரும் போது வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும்.

எனவே, வங்கி, நிதி சேவையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ரெப்போ விகிதம் குறித்த தகவலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவர். கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஆறு முறை ரெப்போ விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு, கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு தற்போது வரை தொடர்ச்சியாக கூடிய ஏழு கூட்டங்களில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து வருகிறது.

வட்டி விகிதம்

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், "நடப்பு ஆண்டுக்கான சில்லறை பணவீக்கம் 4.5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச்சில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2025ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web