ஹெல்மெட் போட்டிருந்தா 1 கிலோ பூண்டு இலவசம்... சிக்னலில் கெத்து காட்டிய போக்குவரத்து போலீசார்!

 
பூண்டு போலீசார் ஹெல்மெட்

தலை கவசம் உயிர் கவசம் என்கிறோம். சிலர் ஹெல்மெட் போடாமல், ஸ்டைலாக வண்டியின் பெட்ரோல் டாங்க் மீது ஹெல்மெட்டை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் போக்குவரத்து போலீசாருக்கும், அபராதத்திற்கும் பயந்து மெயின் ரோட்டில் பயணிக்கும் போது  மட்டுமே ஹெல்மெட் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, தஞ்சாவூரில், இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்திருந்தால் ஒரு கிலோ பூண்டு இலவசம் என்று ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு இலவசமாக 1 கிலோ பூண்டு கொடுத்து திக்குமுக்காட செய்திருக்கிறார்கள் போக்குவரத்து போலீசார்.

அதிக உயிரிழப்பு சாலை விபத்துகளில் நேர்கிறது. அதிலும், பெரும்பாலான சாலை விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் தலையில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்க்கை அதிகம். சாலை விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுத்திட ஹெல்மட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட போக்குவரத்து போலீசார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

ஹெல்மெட்

விழிப்புணர்வின் ஒருபகுதியாக 'பூண்டு இதயத்தை காக்கும் ஹெல்மெட் தலைமுறையைப் பாதுகாக்கும்' என்ற வாசகத்துடன் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த டூவீலர் ஓட்டுனர் 50 பேருக்கு ஒரு கிலோ பூண்டை இலவசமாக வழங்கினர்.தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500-க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், விழிப்புணர்வுக்காக அதனை இலவசமாக வழங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

ஹெல்மெட்

அப்போது சாலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டிவந்தவர்களுக்குப் போக்குவரத்து போலீசார் ஒரு கிலோ பூண்டு வழங்கினர். தற்போது பூண்டு கிலோ ரூ.600 க்கு விற்பனையாகி வரும் நிலையில் போக்குவரத்து போலிஸார் ஒரு கிலோ பூண்டை வழங்கியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web