தோள் பளபளப்பாக்கும், மலட்டுத்தன்மை நீங்கும், இதயம் காக்கும்.. தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?!

 
பாதாம் பருப்பு

உலர் பருப்புகளின் அரசனாகக் கருதப்படும் பாதாம் பருப்பு, ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்வசம் கொண்டுள்ளதால் மனித உடலுக்குப் பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. தினசரி உணவில் பாதாம் பருப்பைச் சேர்ப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய முக்கிய உடல்நலப் பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பாதாம் பருப்பைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலின் நரம்புகள் வலுவடைகின்றன. மேலும், உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு போன்ற குறைபாடுகள் நீங்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் அதிகளவு புரதமும் பல்வேறு வைட்டமின் சத்துகளும் செறிந்து காணப்படுகின்றன. இதனை உட்கொள்வதன் மூலம் உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றல் கிடைக்கிறது.

இதில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிக அளவில் உள்ளன. பாதாம் பருப்புகளைத் தொடர்ந்து உண்டு வருபவர்களுக்குத் தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குவதுடன், மிக இளம் வயதிலேயே தலைமுடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.

ரத்தத்தில் ஏற்கனவே உள்ள நோயெதிர்ப்பு வேதிப்பொருட்களின் திறனைப் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இது காய்ச்சல், வைரஸ் தொற்று மற்றும் பிற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாப்பாகக் காக்கிறது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதைத் தவிர்த்துவிட்டு, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளைச் உட்கொள்ளலாம். இது உடல் எடை மேலும் ஏறாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

பாதாமைத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வருவதைத் தடுக்க முடியும். இதில் இதயத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால் 50% வரை இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இதில் மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நல்ல அளவில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவைச் சீராக வைக்க இது உதவுகிறது.

பாதாமில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. இதனால் இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை உடലில் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.