செல்வமும், ஆரோக்கியமும் தரும் கார்த்திகை விரதம்! எப்படி இருந்தால் முழு பலன் கிடைக்கும்?!

 
இன்று பிள்ளைப்பேறு அளிக்கும் சஷ்டி விரதம்!

விரதங்களில் மேன்மையானது கார்த்திகை விரதம். கந்தனை நம்பியவர்களுக்கு நிச்சயம் கருணை காட்டுவார். மனசு மட்டும் தாங்க ரொம்ப முக்கியமானது. பட்டினி கிடக்கிறது, ஸ்டைலுக்கு மாலை போட்டுக்கிட்டு மலைக்கு போறதுன்னு நீங்கள் வெறுங்கால்களால் கஷ்டப்பட்டு நடப்பதை இறைவன் விரும்பவில்லை. அவையெல்லாம் நாம இஷ்டப்பட்டு செய்யுறது. ஆனால், முழு  மனசோட ஆத்மார்த்தமா அதையெல்லாம் செய்து விரதமிருந்தால், நிச்சயமாக பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.

எல்லா விரதங்களும் இப்படி தான். இது தான் பால பாடம். முருகனுக்கு உகந்த தினமான கிருத்திகையன்று வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்கு, விரைவில் பலன் தரக் கூடியதாக விரத வழிபாட்டு முறை இருக்கிறது. நிறைய பேர் விரதம் இருப்பது என்றால், தன்னை வருத்திக் கொண்டு பட்டினி கிடப்பது என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இன்றைய மருத்துவமும் உண்ணா நோன்பினை மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே சொல்கிறது. உண்ணா நோன்பிருக்கும் போது உடலும், மனமும் சுத்தமாகிறது.

பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தமிழர்களின் விருப்பத்திற்குரிய கடவுளான முருகனை  வழிபடுவதற்கு கந்த சஷ்டி விரதத்தை போன்றே சிறந்த பலன்களை அளிக்க கூடியது “கார்த்திகை விரதம்”. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று அன்பர்களால் அழைக்கப்படும் முருகனின் அருளைப் பெற மேற்கொள்ளும் விரத முறை தான் கார்த்திகை விரதம். ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு மேல் இருக்கும் நாளே கார்த்திகை நட்சத்திர நாளாக கருத வேண்டும்.

கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் கார்த்திகைக்கு முந்தைய பரணி நட்சத்திரத்தன்று நண்பகல் வரை உணவு உட்கொண்டு அன்று இரவு உணவு உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க தொடங்க வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து நீராடி அருகிலிருக்கும் முருகர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும் அன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் முருகனின் மந்திரங்கள், ஸ்கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. 

முருகன்

உணவு உட்கொள்ள வேண்டிய உடல்நிலை கொண்டவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். கார்த்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.

இந்த கார்த்திகை விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் மிகுந்த புண்ணிய பலன்களை அன்னதானம் செய்பவருக்கு கொடுக்கும். கார்த்திகை நட்சத்திர விரதம் மேற்கொண்டு வருபவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகள் அணுகாமை, உடல் மற்றும் மன நலம், நன்மக்கட் பேறு, செழிப்பான பொருளாதார நிலை போன்றவை முருகனின் அருளால் ஏற்படும். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் வரை மேற்கொள்பவர்களுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைக்க பெற்று, மரணம் குறித்த பயங்கள் நீங்கி இறுதியில் முக்தி நிலை கிடைக்க பெறுவார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web