இந்த முறையில் மட்டும் தூங்கவே தூங்காதீங்க... சரியான முறை இது தான்!

 
தூக்கம்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே என்கிறோம். கோடி கோடியாய் பணம் இருந்தாலும் மெத்தையை மட்டும் தான் நம்மால் விலைக்கு வாங்க முடியும். தூக்கத்தை நம்மால் விலைக்கு வாங்க முடியாது? எப்படி தூங்க வேண்டும் என்பதில் ஒரு முறை இருக்கிறது. பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். நமது அன்றாட வேலைகள் முடிந்து இரவில் ஓய்வு எடுப்பது என்பது அடுத்தநாள் வேலைகளை சுறுசுறுப்பாக துவங்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தூங்கும் பொசிஷன் தான் நமது  உடல் சோர்வை நீக்கி சமநிலைப்படுத்தும்.

தலைக்கு அதிக உயரம் இல்லாமல் ஒரு மெல்லிய தலையணை வைத்து, முதுகின் மீது இருபுறமும் கைகள் நீட்டி இருக்க தூங்குவதே  மிகச் சரியான நிலை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

தூக்கம்

இப்படி தூங்குவதால் கழுத்து, தண்டுவடம்  பாதுகாக்கப்படும். முதுகின் மீது கைகள் படும் படி வைத்து தூங்குவது வயிற்றில் உருவாகும் அமிலப் பிரச்சினை, குறட்டை பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும்.  ஏற்பட வாய்ப்புண்டு. கைகளை தலைக்கு  மேலே நீட்டியோ, தலைக்கு வைத்தோ தூங்குவது  நரம்புகளை அழுத்தி வலியை ஏற்படுத்தும்.

முகத்தினை இடதுபக்கம் திரும்பி படுப்பது செரிமானப் பிரச்சனைகளை சீராக்கும். குழந்தைகளைப்  போல் முட்டியை மடக்கி படுப்பது கர்ப்பிணிகளுக்கும், குறட்டை பிரச்சனை உடையவர்களுக்கும் நல்லது. கை, கால்களை நீட்டி பக்க வாட்டில் படுப்பது தண்டு வடத்திற்கு மிகவும் நல்லது.

செல்போனுடன் தூக்கம்

பக்க வாட்டில் வலது புறம் திரும்பி படுப்பது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். அதனால் அந்த வலது புறம் திரும்பி தூங்குவதை கூடுமானவரை தவிர்த்திடுங்க. கர்ப்பிணிப் பெண்கள் இடது பக்கம் திரும்பி படுப்பது கருவில் இருக்கும் குழந்தையின்  ரத்த ஓட்டத்திற்கு நல்லது.பக்கவாட்டில் காலை மடித்து தலையணை மீது வைத்து உறங்குவது உடலுக்கு நல்ல ஓய்வை அளிக்கும்.

எல்லாவற்றிற்கும் முன்னதாக தூங்குவதற்கு  ஒரு மணி நேரத்திற்கு முன் தொலைக்காட்சி, செல்போன், லேப்-டாப் போன்றவைகளை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. என் நண்பர்கள் குடும்பத்தில் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. தூங்குவதற்காக பெட்ரூம் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக குடும்பத்தினர் அனைவரது செல்போனையும் சைலண்ட் மோடில் போட்டு வீட்டின் ஹாலில் வைத்து விடுவார்கள். டி.வி., லேப்-டாப் போன்றவைகளுக்கும் ஓய்வு. படுக்கையறையில் அன்று ஒவ்வொருவரும் எதிர்கொண்ட சவால்கள், சுவாரஸ்யங்கள், அடுத்த நாள் அனைவருக்கும் காத்திருக்கும் வேலை, தங்கள் முன்னேற்றத்திற்கு அன்று அவர்கள் செய்த பணி போன்றவைகள் குறித்து பேசி விட்டு தூங்க செல்வார்கள். இது நமது குழந்தைகளை பழக்கப்படுத்தி ஆரோக்கியமாகவும், அவர்களது வேலைகளை திட்டமிடக் கற்று தரவும் பயன்படும்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web