நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா... தம்பி!

 
சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!!

வாணியம்பாடி அருகே வயது மூப்புக் காரணமாக அக்கா உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கா - தம்பிவாணியம்பாடி அருகே வயது மூப்புக் காரணமாக அக்கா உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்பவருடைய மனைவி வள்ளியம்மாள் (104). இவர், வயது முதிர்வின் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இந்த நிலையில் அதே ஊரில் வசித்து வரும் வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (102) என்பவருக்கு வள்ளியம்மாள் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்கா உயிரிழந்த தகவல் அறிந்த அவர் வேதனை அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அமர்ந்திருந்த இடத்திலேயே துரைசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கா உயிரிழந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web