வாட்ஸ்-அப் ல புது அப்டேட்... இனி ஸ்டேட்டஸ் வைப்பவர்களுக்கு கொண்டாட்டம்... உடனே அப்டேட் பண்ணுங்க!

 
வாட்ஸ் அப்

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைப்பவர்களுக்கு இனி பெரிய கொண்டாட்டம்.. இது நாள் வரை வீடியோக்களை 30 விநாடிகளுக்கு மட்டுமே ஸ்டேட்டஸ் வைக்கமுடிந்த நிலையில், இனி ஸ்டேட்டஸ் வீடியோக்களை 1 நிமிடம் வரையில் வைக்கும் வசதி அறிமுகமாகிறது. 

தன்னுடைய பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது பல்வேறு புதுப்பிப்புகளைச் செய்து வருகிறது. கடந்த சில நாட்களில், பல புதிய புதுப்பிப்புகளை அறிவித்துள்ள வாட்ஸ்-அப் செயலியின் மெட்டா நிறுவனம் அடுத்த அப்டேட் அறிவிப்புக்கு தயாராகி வருகிறது. செய்திகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதைக் காண்பிப்பது, பிற பயனர்களின் சுயவிவரப் படங்களைப் பார்க்கும் பிற பயனர்கள், அந்த படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதைத் தடுப்பது, ஒருவரின் நிலைப் புதுப்பிப்புகளில் அவை குறிப்பிடப்பட்டால் பயனர்களுக்குத் தெரியப்படுத்துவது என அடுத்தடுத்து அப்டேட்களில் அசத்தி வருகிறது. 

வாட்ஸ் அப்


இந்நிலையில், அடுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இனி 1 நிமிட வரையிலான நீளமான வீடியோக்களை பயனர்கள் தங்களது ஸ்டேட்டஸில் பகிர்ந்து மகிழலாம். இது குறித்த சோதனை முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.இது குறித்து மெட்டா நிறுவனத்தின் அறிக்கையில், வாட்ஸ்-அப் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. இது பயனர்கள் 1 நிமிட வீடியோக்களை நிலை புதுப்பிப்பாக பதிவேற்ற அனுமதிக்கும்.

வாட்ஸ் அப்

தற்போதைய நிலவரப்படி, பயனர்கள் 30 வினாடிகள் வரையிலான வீடியோக்களை தங்களது ஸ்டேட்டஸ்களில் பதிவேற்றலாம். எனவே, நீட்டிக்கப்பட்ட வீடியோக்களை தங்கள் ஸ்டேட்டஸ்களாக பதிவேற்ற விரும்பும் பயனர்களுக்கு இது பெரிய கொண்டாட்டமாக இருக்கும். 

இது வரையிலான 30 வினாடிகள் வீடியோக்களின்  வரம்பு, பயனர்கள் தங்கள் எண்ண ஓட்டத்தை, வாழ்க்கையின் கதையைப் பகிர முயற்சிக்கும்போது பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர். இப்போது, ​​ஒரு நிமிட கால இடைவெளியில், பயனர்கள் தங்கள் செய்தியில் திருத்தங்கள் அல்லது சமரசம் செய்யாமல் அதிக விரிவான வீடியோ உள்ளடக்கத்தைப் பகிரலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டை நிறுவிய சில பீட்டா சோதனையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் அப்டேட்கள் மூலம் 1 நிமிடம் வரையிலான வீடியோக்களைப் பகிரும் அம்சம் ஏற்கனவே உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. இந்த புதிய அம்சம் வரும் வாரங்களில் அதிகமான பயனர்களுக்கு வெளிவரும். இந்த புதிய அப்டேட்டைப் பெற பயனர்கள் வாட்ஸ்அப்பைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web