மக்களே உஷார்! குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டால் இதை செய்ய மறந்துடாதீங்க!

 
மக்களே உஷார்! குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டால் இதை செய்ய மறந்துடாதீங்க!


கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல நாடுகளில் 3ம் அலையின் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. ஒரு சில மாதங்களில் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.முதல் அலை முதியவர்களுக்கும், 2வது அலை இளைஞர்களுக்கும், 3வது அலை குழந்தைகளுக்கும் தீவிரமாக பரவலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


2வது அலையிலேயே கொரோனாத் தொற்றுக்கு ஆளான பல குழந்தைகளுக்கு உள் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டதாகவும், மல்டி சிஸ்டம் இன்ஃபிளமேட்டரி சிண்ட்ரோம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.

மக்களே உஷார்! குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டால் இதை செய்ய மறந்துடாதீங்க!

குடும்பத்தில் பெரியவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போது குடும்பத்தில் மற்றவர்களுக்கு தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்ட போதுதான் அறிகுறிகள் இல்லாத தொற்று குழந்தைகளுக்கு இருப்பது தெரியவந்தது.


பெரியவர்களுக்கு ஏற்பட்டது போன்றே காய்ச்சல், இருமல், சோர்வு, சுவாசித்தலில் சிரமம், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, சுவை உணர்வு. வாசனை உணர்வு இல்லாமல் போவது போன்ற லேசான தொற்று தென்பட்டால், அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைபடி மருந்துகள் கொடுக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அதை வைத்து வாய், தொண்டையைக் கொப்பளிக்க செய்யலாம்.

மக்களே உஷார்! குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டால் இதை செய்ய மறந்துடாதீங்க!

தொடர்ந்து நீர் ஆகாரம், ஊட்டச்சத்து உள்ள உணவுகளை வழங்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையோடு தான் எந்த ஒரு மருந்தையும் வழங்க வேண்டும். சாதாரண காய்ச்சல்தான், எங்கள் குழந்தை வெளியே செல்லவே இல்லை அதனால் கொரோனா இருக்காது என்று அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web