சோகம்.. உலகின் மிகவும் வயதான நபர் காலமானார்.. வயசு என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க!

 
ஜுவான் விசெண்டே

உலகின் மிக வயதான மனிதர் காலமானார். 2022 ஆம் ஆண்டு உலகின் மிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த வெனிசுலாவைச் சேர்ந்த ஜுவான் விசெண்டே பெரஸ் மோரா, தனது 114வது வயதில் நேற்று காலமானார். ஜுவான் விசெண்டே 2022, பிப்ரவரி. 4ம் தேதி கின்னஸ் புத்தகத்தில் இடம்ப்பெற்ற போது அவருக்கு 112 வயது , 211 நாட்கள். அதன் பிறகு அவர் உலகின் மிக வயதான மனிதர் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டார்.

ஜுவான் விசென்டே 11 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவருக்கு 41 பேர குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். ஜுவான் விசென்டே மே 27, 1909 அன்று, தச்சிராவில் உள்ள ஆன்டினியோ மாகாணத்தில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். அவர் 10 குழந்தைகளில் 9 வது குழந்தையாக பிறந்தார்.

5 வயதில், தந்தை மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து விவசாயம் செய்யத் தொடங்கினார். கரும்பு மற்றும் காபி அறுவடைக்கு உதவியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web