காலையிலேயே அதிர்ச்சி... தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

 
தங்கம்

காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,705 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,640 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் 5,730 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,840 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 6,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 49,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 79.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 79,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web