பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்... தவறி விழுந்த சுசீலா... தாங்கிப் பிடித்த முதல்வர்!

 
சுசீலா

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த விழாவில், மேடையில் தவறி விழப் போன பாடகி பி.சுசீலாவை உடனடியாக சுதாரித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்து, விழுவதைத் தடுத்தார்.

இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திரைப்படப் பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தார். 

தவறி விழுந்த சுசீலா

பாடகி பி.சுசீலா தனது இருக்கையில் இருந்து எழுந்து வர முடியாத சூழலில் அவரது இருக்கைக்கு அருகில் சென்ற முதல்வர் முனைவர் பட்டத்தை வழங்கிய போது சுசீலா தடுமாறி கீழே விழச் சென்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட முதல்வர் அவரைத் தாங்கிப் பிடித்தார். பாடகி பி.சுசீலா முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

பி.எம்.சுந்தரம்

இதேபோல இசைக்கலைஞர் பி.எம்.சுந்தரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web