பிரபல சின்னத்திரை நடிகை காதல் திருமணம்... குவியும் வாழ்த்துகள்!

 
ஹாரிகா

சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலின் கதாநாயகி ஹரிகாவிற்கும், ‘சுந்தரி’ மற்றும் ‘இலக்கியா’ ஆகிய தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அரவிஷூக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அரவிஷ், சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர்.

‘திருமகள்’ தொடரின் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமான நடிகை ஹரிகா, தெலுங்கு தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமகள் தொடர், ரசிகர்களிடையே இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ஹரிகாவும், கோயம்புத்தூரைச் சேர்ந்த அரவிஷூம் காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களது காதல் திருமணத்தில் நிறைவடைய இருக்கிறது. திருமணம் குறித்த அறிவிப்பை தற்போது இருவரும் அறிவித்திருக்கின்றனர்.


 

நடிகை ஹரிகாவும், அரவிஷூம் அவர்களுடைய சமூகவலைதள பக்கங்களில் சேர்ந்து திருமணத்திற்கு தயாராவது குறித்த ரீல்ஸ்கள் பதிவிட்டு வந்தனர். மேலும், அவர்கள் காதலிப்பதையும் வெளிப்படையாக அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற்றது. விரைவில் நடைப்பெறவுள்ள திருமணத்திற்கு இருவருமாக சேர்ந்து ஷாப்பிங்க் செய்து வருகிறார்கள். இதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு ரசிகர்களும் சின்னத்திரை நடிக, நடிகைகளும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web