தெறி வீடியோ... சிங்கப் பெண்களின் அட்ராசிட்டி... சேலைகட்டி பைக் சாகசம்!

 
நேபாள் பெண்கள் பைக் சாகசம்

சிங்கப்பெண்கள் படுபாந்தமாக சேலைக் கட்டி, பைக் ஓட்டியபடியே சகாசம் செய்கிற வீடியோ வைரலாகி வருகின்றது. எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிர்ப்பும் இருக்குமில்லையா... அப்படி ஏதோவொரு புண்ணியவான் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு சொல்லி  இருப்பான்  போல... அதன் பின்னர் வீடியோவை ரிமூவ் செய்து விட்டனர். ஆனால், நம் வாசகர்களுக்காக அதே நபர் அப்லோடு செய்திருந்த வீடியோவை இணைத்திருக்கிறோம். இன்ஸ்டா லைக்குகளையும், ஷேர்களையும்  பெறுவதற்காக இளசுகள்  விசித்திரமான செயல்கள் செய்து வருகின்றனர்.  

சேலையில் இளம்பெண்கள் 2 பேர் அந்த வீடியோவில் ஒய்யாரமாக நடந்து வந்தபடி பைக் மீது ஏறி அமர்ந்து அநாயசிமாக ஓட்டுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை  பெண்கள் கார், ஆட்டோ ரிக்‌ஷாக்களை ஓட்டுவது கடந்த 10 வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2 வீலர்களில்  ஸ்கூட்டரை மட்டுமே ஓட்டினர்.  இளம்பெண்கள் பைக் ஓட்டுவதை  முன்பெல்லாம் அரிதாகத் தான்  பார்க்க முடியும்.

வெளிநாடுகளை பொறுத்தவரை இவை சர்வ சாதாரணம் தான்.  அந்த வகையில், நேபாளத்தில் இரு இளம்பெண்கள் பைக் ஓட்டி அசத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலை அணிந்துக் கொண்டு பைக் ஓட்டுவது மிகவும் சிரமம். இதனாலேயே பலர் சேலை அணிந்து கொண்டு பைக் ஓட்ட முயற்சிப்பதில்லை. 

நேபாளத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இரு இளம்பெண்கள்  பேண்ட் அணிந்து, அதன் மேல் சேலைக் கட்டிக்கொண்டு, பைக் ஓட்டுகின்றனர். இதனை விட  ஹைலைட்டான விஷயம் என்னவெனில்   ஓட்டியது டெர்ட் பைக்ஸ் எனப்படும் சக்திவாய்ந்த பைக்குகள். இந்தியாவை பொறுத்தவரை டெர்ட் பைக்குகள் பொதுவாகவே சாலையில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அதிக டார்க் திறனை விரைவாக வழங்குபவையாக இருப்பதால், சாலை பாதுகாப்பு கருதி டெர்ட் பைக்குகளை பொது சாலையில் ஓட்ட இந்திய மோட்டார் வாகன சட்டம் தடை விதித்துள்ளது. மூடிய வளாகத்திற்குள்ளும், தனிப்பட்ட இடத்தில் மட்டுமே இந்த பைக்குகளை ஓட்ட முடியும்.

நேபாளத்திலும் டெர்ட் பைக்குகளுக்கு தடை இருந்து வரும் நிலையில் அதையும் தாண்டி இந்த இளம்பெண்கள் இந்த ரக பைக்கை ஓட்டியுள்ளனர். இதற்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. இந்த வீடியோவில் 2  இளம்பெண்கள்   ஹோண்டாவின் சி.ஆர்.எஃப் டெர்ட் பைக்குகளை ஓட்டுகின்றனர்.  உலகளவில்  இந்த பைக்குகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ஜப்பானில் டெர்ட் பைக் சாகசங்களில் ஈடுப்படும் பெரும்பாலானோர் சி.ஆர்.எஃப் பைக்குகளையே வாங்குகின்றனர்.

நேபாள் பெண்கள் பைக் சாகசம்

இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள இளம்பெண்களில்  ஒருவர்  சேலையும், மற்றொருவர் சாண்டல்ஸ்ம் அணிந்துள்ளனர். டெர்ட் பைக்குகளை இளம்பெண்கள் இவ்வாறான உடையில் ஓட்டி அசத்தியுள்ளனர். நிச்சயமாக இவர்கள் டெர்ட் பைக்குகளை ஓட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள். ஏனெனில் ஆண்களில் பலரும் இந்த ரக பைக்குகளை ஓட்ட தடுமாறுவார்கள்.

இவர்களின்  இன்ஸ்டாகிராம் கணக்குகளை பார்த்ததில், இன்ஸ்டாகிராம் டைம்லைனில் டெர்ட் பைக் சம்பந்தமான நிறைய பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் சில பதிவுகளில் அவர்கள் டெர்ட் பைக்கை ஓட்டும் படங்களும், வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. சில வீடியோக்களில் அவர்கள் பைக் வீலிங் செய்யும் காட்சிகளும் பதிவிடப்பட்டுள்ளன.

ஆனால் இது மாதிரியான காரியங்களை செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில்   டெர்ட் பைக்கை பொது சாலையில் ஓட்டுவதே தவறு தான். அதிலும்  சேலையில் பைக் ஓட்டுவது மிக மிக ஆபத்தானது.  சேலை பைக்கின் ஏதேனும் ஒரு பகுதியில் சிக்கிக் கொண்டால், உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web