உஷார்!! குழந்தைகளுக்கு பால், நெய் எந்தளவுக்கு தரலாம்?

 
உஷார்!! குழந்தைகளுக்கு பால், நெய் எந்தளவுக்கு தரலாம்?

மணல் மணலாக இருக்கிற நெய் தான் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களில் காட்டப்படுவதை தினமும் தொலைக்காட்சிகளில் பார்த்து பார்த்து நம் வீட்டு குழந்தைகளுக்கு பாலையும், நெய்யையும், வெண்ணையையும் தினமும் உணவில் சேர்க்கிறோம். இது சரியானதா? இதனால் இன்றைய காலத்து குழந்தைகள் ஒபிசிட்டியுடன் வளர்கின்றனரோ என்ற ஐயப்பாடும் தற்காலப் பெற்றோரிடையே பயத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தைப் பருவத்தில் புறங்கையில் வழிய வழிய வெண்ணெய் சாப்பிட்ட தலைமுறைதான் நாம். பொதுவாக ”ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிள்ளைகளுக்கும் பால், வெண்ணெய், நெய் மூன்றையும் கொடுக்கலாம். வளரும் மற்றும் பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான புரதம் மற்றும் கொழுப்பு அனைத்துமே நெய், வெண்ணெயில் செறிவாக உள்ளது. ஓட்டமும் விளையாட்டுமாக இருக்கும் குழந்தைகளுக்கு செரிமான சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதனால், அவை புரதமும் கொழுப்புமாக மாறி பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால் வெண்ணெயும் நெய்யும் குழந்தைகளை குண்டாக்கிவிடும் என்றே பயமே தேவையில்லை.

உஷார்!! குழந்தைகளுக்கு பால், நெய் எந்தளவுக்கு தரலாம்?

வெண்ணெயில் சர்க்கரையை சேர்த்து க்ரீமாக மாற்றி கேக்கில் சேர்த்து சாப்பிடும்போதுதான் அவை உடலுக்கு கேடாகவும், கரையா கொழுப்புக்களாகவும் உடலில் படிந்து விடுகின்றன. நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் அப்படியே கிடைக்க வெண்ணெயைக் காய்ச்சும்போது, முருங்கையிலையைப் போட்டுக் காய்ச்சலாம். இப்படி காய்ச்சப்பட்ட நெய்யை குழந்தைகளுக்குத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், தேவையான சத்துக்களை உணவுகளிலிருந்து பெற்று உடல் உறுதியாகும். வலிமையுடன் சுறுசுறுப்பையும் பெறுவார்கள்.

5 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள் என்றால், தினமும் 25 வெண்ணெய், நெய் சேர்த்துக் கொள்ளலாம். அதே போலவே குழந்தைகளும், பெண்களும் தினமும் இரண்டு கப் பால் பனங்கற்கண்டும் மஞ்சள்தூளும் சேர்த்து சாப்பிடலாம். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ”வெண்ணெய், நெய் எதுவானாலும் உருவாக்கியதில் இருந்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அதன்பிறகு அதை பயன்படுத்தினால் அஜீரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும்.

From around the web