ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பது ஏன்?

 
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பது ஏன்?

பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும்.

பிறந்த போது ஆரோக்கியம், படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், குழந்தைப்பேறு, செல்வம் என தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தபிறகு வரும் முதல் ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது நம் பாரம்பரியத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சமயத்தில் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஆடியில் தாம்பத்ய வாழ்க்கையை தவிர்க்க வேண்டும். தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் .

சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என ஊர்ப்பக்கம் சொல்வது வழக்கம். அங்காரகனுக்கும், ஆதவனுக்கும் தந்தைக்குரிய யோகபலம் பெற்ற நாளில் முறையாகப் பரிகாரங்களைச் செய்தால். பெற்றோர்களுக்குரிய தோஷங்கள் விலகிவிடும் என்பதையும் சொல்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.

விஞ்ஞான ரீதியாக சித்திரையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பெருமளவு உடல்நலக்குறைபாடு ஏற்படலாம் என்பதால் இந்த சொலவடை சொல்லியிருக்கலாம் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் விளக்கம் அளிக்கின்றனர்.

From around the web