செம! விரைவில் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் வெளியீடு! என்ன விலை தெரியுமா?

 
கூகுள் பிக்சச் செல்போன்

விரைவில் கூகுள் பிக்சள் செல்போன்கள் 7 சிரீஸ் வெளியாகிறது என்பது இன்றைய யூத்களுக்கு உற்சாகமான செய்தி தான். கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தயாரித்து வருகிறது என்பதும் அந்த போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அதன் அடுத்த நிலை மாடலான கூகுள் பிக்ஸல் சீரிஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகியவற்றை வெளியிட உள்ளது. இந்த புது மாடலை கூகுள் தனது அடுத்த நிலை ப்ராசஸர்களோடு அக்டோபர் 6ம் தேதி ‘மேட் பை கூகுள்’ நிகழ்வில் வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

கூகுள் பிக்சச் செல்போன்

கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது (கடந்த கூகுள் I/O-இல் அறிமுகமான) நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டென்சர் SoC-களால் இயக்கப்படும் மற்றும் அண்ட்ராய்டு 13 ஓஎஸ் இல் இயங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கூகுளின் புதிய சிப்செட் ஆனது புகைப்படங்கள், வீடியோக்கள், செக்யூரிட்டி மற்றும் ஸ்பீச் ரிகக்னைசேஷன் போன்றவைகளின் மீதான பெர்சனலைஸ்டு அம்சங்களை வழங்கும் என்றும் கூகுள் கூறுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, Gadgetfull BD வழியாக பிக்சல் 7 ப்ரோவின் அன்பாக்சிங் வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் பேக், கூகுள் I/O 2022-இல் டீஸ் செய்யப்பட்ட அதே 'வைசர் டிசைன்', அந்த வைசர் டிசைனில் 2 மெட்டல் கட்அவுட்கள் உள்ளன. முதல் கட்அவுட்டில் இரண்டு கேமராக்கள் உள்ளன, இரண்டாவது கட்அவுட்டில் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

கூகுள் பிக்சச் செல்போன்

வெண்ணிலா வேரியண்ட் ஆன கூகுள் பிக்சல் 7 ஆனது ரூ.51,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடலான பிக்சல் 7 ப்ரோ ஆனது சுமார் ரூ.70,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த இரண்டுமே எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயமே ஆகும்; அசல் விலைகள் முன்பின் இருக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web